Saturday, April 23, 2011

Mandodari

மண்டோதரி

வீணையில்
என்னவரின் சிவஸ்துதி கேட்டேன்,
ஸ்லோகத்தின் நுடிகளில் ஒரு தூய்மையை உணர்ந்தேன்,
மனசில் ஒரு ஆனந்தம்,
அந்த மனசின் வெண்மையை மனசார உணர்ந்தேன்.

ஆனால் இந்த வெண்மையின் அந்திரங்கத்துள் ஏனிந்த கருந்துளை?

முற்றும் மூன்று உலகத்தை தன் உள்ளங்கையால் ஆண்வதற்கு,
ஏனிந்த பேராசை?

நான் மண்டோதரி, சாஸ்திர பூரணமாக அவரின் கை பிடித்தேன்
அக்னியின் சாட்சியில் அவர் உலகத்தில் பங்கு கேட்டேன்
ஆனால் அவர் இதயத்தின் ஆழத்தில் என் ஆட்சி செல்லவில்லையே, ஏன்?

என் விழியன் மொழி அவருக்கு புரியவில்லயே........
என் அதரங்களின் ஏக்கக்குரல் என்னவரின் அட்டஹாசதில் எங்கே புதைந்ததோ ?
என் மௌனமே அவருக்கு ஒரு ஆயுதமாகிவிட்டதோ?

அவரின் பிழைகளை கண்டு என் நெஞ்சம் பதறுகிறது
என் குரல் ஒரு மௌனகுயிலின் குரலாக என்னில் தங்கிவிட்டதே? ஏன்?

அஞ்சாநெஞ்சம் கொண்ட என்னவரின் வீழ்ச்சியை நான் உண்மையாக உணர்கிறேன்
என் உணர்வு அவருக்கு புரியவில்லயே..........

சிவனின் பக்தன் என்னவர் ராவணனின் வீரமரணத்தை நான்
கண்ணார காண்கிறேன்
என்னால் ஒன்றும் சைய்யமுடியவில்லயே .....
இதுதான் விதியா ?
இதுதான் விதியின் விளையாட்டா?

நான் மண்டோதரி, ராவணனின் தரும பத்தினி
என்னவரின் வீழ்ச்சியில் நான் சமபங்காளி, கூட்டாளி.......
என்னை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லையே ...... ஏன் ?

நான்
மண்டோதரி, ராவணனின் தரும பத்தினி ....

No comments:

Post a Comment