அஹல்யா
நான் ஒரு கல்
வீதியின் ஓரத்தில் இருக்கும் ஒரு சாதாரண கல்.
ராமனின் வருகைக்காக காத்துகொண்டிருக்கிற ஒரு சின்ன பாறை.
என் உள்ளம் என் சோகத்தால் கரைந்தாலும்
என் கண்ணீர் பாறைக்குள் ஈரமாக என்னுள் தங்கிவிட்டது
என்னை பஞ்சகன்யாவில் ஒரு கன்னியாக உலகம் பூசித்தலும்
என் வரலாறு ஒரு கேள்வி ஆகிவிட்டதல்லவா?
பிரமன் என்னை ஒரு இலட்சிய பெண்ணாக உருவாக்கினான்
தாயில்லாமல் வளரும் என்னை ரிஷி கௌதமரின் கையில் ஒப்படைத்தான்
தந்தையாக என்னை வளர்த்த ரிஷியே உன்னிடம் என்னை நான் ஒப்படைத்துகொண்டுவிட்டேன்
தந்தையே............... என் மனது உனக்கு புரியவில்லையா?
மனதும் தாபமும் புரிந்ததினால் தான் இந்த கடுஞ்சினமா?
நான் மரபு தாண்டினேன் என்று நினைத்துகொண்டு என்னிடம் நீ கொபித்துகொண்டால் .....ரிஷியே
உன்னிடம் என் சீற்றத்திருக்கு விலை ஏது?
நான் கல் ஆக்கப்பட்டேன் என்று எனக்கு சோகமில்லை
பெண் என்று என்னை தூசித்து, என் சைகையை கண்டனம் செய்து
ராமனின் வருகைக்காக என்னை காத்திருக்க வைத்து
மறுபடியும் என்னை ஒரு கன்னியாக மாற்றி
பூசிக்க வைக்கும் ஆணே
உன்னை நீனே தாழ்த்திக்கொண்டு விட்டாய்
மரபு தாண்டியது நீதான்
ரிஷியே நானில்லை
No comments:
Post a Comment